மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 21 வயது கல்லூரி மாணவர் தனது 26 வயது மாற்றாந்தாயை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை தரப்பில் வெளியான தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2024-ஆம் ஆண்டு வேலை தேடி வந்தபோது, தனியார் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்த 55 வயதான விகாஸ் ஸ்ரீவஸ்தவாவை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்ட நிலையில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தந்தையின் இந்தத் திருமணத்தை அவரது மகனான அக்ஷத் ஸ்ரீவஸ்தவா(21) ஏற்கவில்லை.
இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 2026 ஏப்ரல் 10-ஆம் தேதி அக்ஷத் தனது அறைக்குள் நுழைந்து தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் தெரிவித்தார். மேலும், இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
தனக்கு நேர்ந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறி உதவி கேட்டபோதும், குடும்பத்தின் கௌரவத்தையும் மகனின் படிப்பையும் காப்பாற்ற அமைதியாக இரு என விகாஸ் கூறியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், இறுதியில் காவல்துறையை அணுகி புகார் அளித்தார்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டர். விசாரணைக்கு பின்னர் அக்ஷத் ஸ்ரீவஸ்தவாவை போலீசார் கைது செய்தனர். குடும்பத்துக்குள் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்கள் குறித்து இந்த சம்பவம் மீண்டும் சமூகத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: ஆபரேஷன் சிந்தூர்.. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவிய சீனா.. ரகசிய பங்கு அம்பலம்..!



