திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.. இந்த பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு முடிந்து உணவு இடைவேளையில் மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர்..
இந்த நிலையில் நடைமேடைகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.. இந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..



