ரேடியோகிராபி படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியில் சேர சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு மருத்துவம் சார்பு சேவையின் கீழ் காலியாக உள்ள ரேடியோகிராப்பர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் – 67
- பொதுப்பிரிவு – 20
- பிசி – 17
- பிசிஎம் – 2
- எம்பிசி/ டிஎன்சி – 14
- எஸ்சி – 9
- எஸ்சிஏ – 2
- எஸ்டி – 3
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு:
- பொதுப் பிரிவு : 32 வயது
- மாற்றுத்திறனாளிகள் : 42 வயது
- முன்னாள் ராணுவத்தினர் : 48 வயது
- அதே நேரத்தில், எஸ்சி / எஸ்டி / எஸ்சிஏ / பிசி / பிசிஎம் / எம்பிசி / டிஎன்சி பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: தமிழ்நாடு அரசின் ரேடியோகிராப்பர் பதவிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட கல்வித் தகுதிகளில் ஏதாவது ஒன்றை பெற்றிருக்க வேண்டும்.
- 2 ஆண்டு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பம் (Radiodialysis Technology) டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது
- ரேடியோகிராப்பி மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் பாடப்பிரிவில் பி.எஸ்சி (B.Sc) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது
- ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பம் / ரேடியோலாஜி மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி (B.Sc) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 11 கீழ் ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) மூலம் நிரப்பப்பட உள்ள இந்த ரேடியோகிராப்பர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் எதுவும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்றுள்ள கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மதிப்பெண் அடிப்படையிலான கணக்கீட்டு முறை (Weightage System) பின்பற்றப்படும்.
மதிப்பெண் கணக்கீட்டு முறை
- டிப்ளமோ / டிகிரி கல்வித் தகுதி – 50 சதவீதம்
- 12-ம் வகுப்பு – 30 சதவீதம்
- 10-ம் வகுப்பு – 20 சதவீதம்
இந்த அடிப்படையில் மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? இப்பணிக்கு ஆர்வமாக உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.600 மற்றும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, டிஏபி பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.01.2026.



