வாக்கிங் சீக்ரெட்.. 7 நாளில் 3 கிலோ எடையை குறைக்கலாம்..! ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன..?

walking 1

இன்றைய உட்கார்ந்த வாழ்க்கை முறை நம்மை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்கிறது. முன்னோர்கள் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்ததற்கு அவர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் இயற்கை உணவுப் பழக்கங்களே முக்கிய காரணம். ஆனால் இன்று மணிக்கணக்கில் கணினி முன் அமர்ந்து வேலை செய்வதும், மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்பதும், பயணத்திற்கு வாகனங்களை மட்டுமே சார்ந்து இருப்பதும் உடல் இயக்கத்தை கடுமையாகக் குறைத்துள்ளது. இதன் விளைவாக பல நோய்கள் உருவாகின்றன.


அதில் மிக முக்கியமான பிரச்சினை உடல் பருமன். இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சில வகை புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் உயிரிழப்புக்கும் காரணமாகலாம். எனவே உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

பலர் ஜிம்மிற்குச் சென்று பணம் செலவழித்து எடையைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், எளிதாக எடையைக் குறைக்க உதவும் வழி நடைபயிற்சி. தினமும் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் நடந்தால், ஒரு வாரத்தில் 2 முதல் 3 கிலோ வரை எடை குறையலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக 7 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நடந்தால், கணிசமான எடை குறைவு காணப்படும். மூன்று மாதங்கள் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டால், 20 முதல் 30 கிலோ வரை எடை குறைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எடையைக் குறைக்க நடைபயிற்சி மட்டும் போதாது. அதோடு சரியான உணவுப் பழக்கமும் முக்கியம். அதிக கொழுப்பு மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இறைச்சி உணவுகளை குறைத்து, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றினால், ஒரு மாதத்திலேயே நல்ல மாற்றத்தை உணரலாம்.

ஒரு மணி நேரம் நடப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்:

  • உடல் எடை குறைவு
  • மூளை சுறுசுறுப்பாக இருந்து, மறதி பிரச்சனை குறைவு
  • இரத்த ஓட்டம் மேம்பாடு
  • மாரடைப்பு அபாயம் குறைவு
  • உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்
  • நுரையீரல் செயல்பாடு மேம்பட்டு, சுவாச பிரச்சனைகள் குறையும்

தினமும் நடக்கும் போது மெதுவாக வேகத்தை அதிகரிக்கலாம். ஆரம்பத்தில் சற்று கடினமாக தோன்றினாலும், தொடர்ந்து செய்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக மாறும்.

Read more: துணி துவைக்கும் டிடர்ஜென்ட் முதல் வீட்டை சுத்தம் செய்யும் திரவம் வரை..!! புற்றுநோயை உண்டாக்கும் அபாயம்..!!

English Summary

Walking: Walking for an hour every day can help you lose 3 kg in 7 days! What do the study results say?

Next Post

கல்லீரை பாதுகாக்கும் வெல்லம்.. தினமும் இந்த அளவு சாப்பிட்டால் போதும்.. முழு நன்மையும் கிடைக்கும்!

Thu Dec 18 , 2025
Jaggery is rich in antioxidants, which play a vital role in liver health. But how much jaggery should be consumed?
Jaggery Benefits 1024x576 2

You May Like