மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், 61 வயது முதியவர் ஒருவர் தனது பெண் தோழியுடன் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வொர்லி பகுதியைச் சேர்ந்த 61 வயதான அந்த முதியவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று காலை 10 மணியளவில் தனது 40 வயது பெண் தோழியுடன் குர்லாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று அறை எடுத்துத் தங்கியுள்ளார். அறைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே, அந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்தப் பெண், உடனடியாக ஹோட்டல் வரவேற்பு அறையை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஹோட்டல் ஊழியர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் குர்லா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்புக் குழுவினர், மயக்க நிலையில் இருந்த முதியவரை மீட்டுச் சியோன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போலீசார் அந்த அறையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது பாட்டில்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்ததைக் கண்டறிந்தனர். இது தொடர்பாக அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், “நாங்கள் இருவரும் காதலர்கள். அறையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டிருந்தபோது அவர் மது அருந்தினார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார். முதியவரின் மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : 2026இல் தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய் தான்..!! அவர் கை காட்டுபவர்தான் MLA..!! செங்கோட்டையன் அதிரடி பேச்சு..!!



