பொதுவாக குழந்தைகள் செய்யும் பல சேட்டைகளும், தொல்லைகளும் அழகாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் வளர வளர அடம் பிடிக்கும் பழக்கமும் அதிகமாகி பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
ஒரு சில குழந்தைகள் பெற்றோர்கள் சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதமாக இருப்பார்கள். இதனால் குழந்தைகளை அடித்தாலும், திட்டினாலும் தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளாமல் அடம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.
இவ்வாறு அதிகமாக அடம் பிடிக்கும்போது அவர்கள் கேட்டதை செய்யாமல் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சரி, தவறு எது என்பதை சொல்லித் தர வேண்டும்.
பெற்றோர்கள் செய்யும் செயல்களை பார்த்து தான் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். அப்படி இருக்க குழந்தைகளின் முன்பு கோபப்படுவது, திட்டுவது, சண்டை போடுவது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.