fbpx

கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்…!

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகைக்கு ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இதில் பயன்பெற, 9 மற்றும் 10-ம் வகுப்பில் பயிலும் மாணவிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தன் பெயரில் கணக்கு தொடங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண், வங்கிக் கணக்கு, வருமானச் சான்று, சாதிச்சான்று நகல்களை தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் மாணவியரின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த காய்கறிகளை அளவுக்கு அதிகமாக உண்பதால் இவ்வளவு ஆபத்தா.?

Mon Jan 8 , 2024
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒரு சில காய்கறிகளையும் அதிக அளவு சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். காய்கறிகள், பழங்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்தவை என்பதுதான் நமக்குத் தெரியும். ஆனால் நாம் அடிக்கடி உணவில் பயன்படுத்தி வரும் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிக அளவு உட்கொள்ளவதால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. 2. பீட்ரூட் […]

You May Like