சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில் கோவா சென்றிருந்த ரவி வீட்டிற்கு வந்ததும் ரூமுக்குள் சென்று பெட்டியில் உள்ள தன்னுடைய துணிகளை எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தான். அப்போது பெட்டியில் நீத்துவின் டிரெஸ் ஒன்றும் அதில் இருந்தது. இதைப்பார்த்த ஸ்ருதி, உடனே நீத்துவுக்கு போன் போட்டு உங்க டிரெஸ் ஒன்னு தவறுதலாக ரவி சூட்கேஸுக்குள் வந்துவிட்டது. அதை வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்கிறார்.
ஆனால் நீத்து நாம அவங்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிட டிரெஸ்ஸை வச்சா, இவ என்ன நமக்கே போன் போட்டு சொல்றா என கன்பியூஸ் ஆகிறார். மறுபுறம் மனோஜ் கிரிஷின் ஸ்கூலுக்கு சென்று அவனது ரேங்க் கார்டு வாங்கியதால் மனோஜை கட்டிப்பிடித்து நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என ரோகிணி சொல்கிறார். நீ எதுக்கு சந்தோஷமா இருக்க என மனோஜ் கேட்கையில், ஏன்னா நான் தான் கிரிஷோட அம்மா என சொல்கிறார் ரோகிணி. இதை கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைய, அய்யய்யோ சந்தோஷத்தில் உண்மையை உலறிட்டோமே எனக்கூறி தனக்குள் கல்யாணியின் ஆவி வந்தது போல் நடித்து மனோஜை நம்ப வைத்து எஸ்கேப் ஆகிவிடுகிறாள்.
இதையடுத்து, கிரிஷ் மனோஜை டாடி என அழைக்க அனைவரும் ஷாக் ஆகிறார்கள். உடனே விஜயா டென்ஷன் ஆக, அண்ணாமலை கிரிஷை அழைத்து, நீயா அவனை அப்பானு சொன்னியா இல்லேனா உன்னை யாராவது சொல்ல சொன்னாங்களா என கேட்க, அதற்கு கிரிஷ், ரோகிணியை கைகாட்டுகிறார். பின்னர் ரோகிணி, அய்யய்யோ மாட்டிவிட்டுட்டானே என பதற்றத்துடன் வந்து என்ன சொல்ல என தெரியாமல் திணறுகிறாள்.
இதையடுத்து கிரிஷ் தன்னுடைய ரேங்க் கார்டை எடுத்து வந்து மனோஜிடம் கையெழுத்து போட சொல்கிறார். முதலில் மறுக்கும் மனோஜை ரூமுக்குள் அழைத்து செல்லும் ரோகிணி, தனக்குள் கல்யாணியின் ஆவி வந்ததுபோல் நடித்து அவனை கையெழுத்து போட சொல்கிறார். மனோஜும் அதை நம்பி உடனே வந்து கிரிஷின் ரேங்க் கார்டில் கையெழுத்து போடுகிறார். இதையெல்லாம் பார்த்த மீனா, உண்மையை சொல்லாம இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி பொய் சொல்லிகிட்டு இருக்க போற என ரோகிணியிடம் கேட்கிறாள்.



