அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கும், கலைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பாக வெளிநாடுகளில் கலை ஆசிரியராகப் பணிபுரியவும், திருவாரூர் மாவட்ட மகளிர் மையத்தில் கணினி உதவியாளராகப் பணிபுரியவும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அயலகத் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியையும், கலைகளையும் வளர்க்கும் நோக்கில், மியான்மர், இந்தோனேசியா, மாலத்தீவு, மொரிஷீயஸ் உள்ளிட்ட பல நாடுகளில் தற்காலிக கலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 1,25,000 ஊதியமாக வழங்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்று வருவதற்கான பயணச் செலவு, விசா மற்றும் தங்குமிடச் செலவுகளை அரசாங்கமே ஏற்கும். விண்ணப்பதாரர்கள் 25 வயது நிரம்பியவராகவும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் https://artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, டிசம்பர் 31, 2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Read More : ஆக்டோபஸ் உயிரினத்துக்கு 3 இதயங்கள்..!! நீந்தினாலே துடிப்பு நின்றுவிடும்..!! ஆழ்கடலில் நடக்கும் மர்மம்..!!



