தவெக கட்சியில் இருந்து நிர்வாகி ஒருவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கி உள்ளார்.. சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
மேலும் தவெக தலைமையையை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.. கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.. தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது..
இதனிடையே கட்சியில் இருந்து களையெடுக்கும் பணிகளும் தற்போது தொடங்கி உள்ளது.. அந்த வகையில் தவெகவில் இருந்து நிர்வாகி ஒருவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.. தகாத உறவு புகாரில் சிக்கிய தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதனின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. கட்சிக்கு எந்த விதமான களங்கத்தை யார் விளைவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
Read More : திமுக தீய சக்தியா? விஜய்யின் விமர்சனத்திற்கு செந்தில் பாலாஜி ‘நச்’ பதில்..!



