86 வயதான பிஜி நாட்டைச் சேர்ந்த ஒரு ஊபர் (Uber) டிரைவரின் உருக்கமான தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழில் அதிபர் நவ் ஷா (Nav Shah) அந்த முதியவரின் கதையை இணையத்தில் பகிர்ந்ததையடுத்து, உலகம் முழுவதும் பலரையும் அந்த மனிதரின் தாழ்மை மற்றும் பெருந்தன்மை நெகிழ வைத்துள்ளது.
நவ் ஷா சமீபத்தில் பிஜியில் ஒரு ஊபர் பயணத்தின் போது அந்த முதியவரை சந்தித்தார். அவரது வயதைக் கருத்தில் கொண்டு “இந்த வயதிலும் நீங்கள் ஏன் இன்னும் வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அந்த டிரைவர் புன்னகையுடன், “நான் இந்தியாவில் ஏழை சிறுமிகளின் கல்விக்காக ஓட்டுகிறேன்” என்று பதிலளித்தார்.
அவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது வருமானத்தைக் கொண்டு ஆண்டுதோறும் 24 சிறுமிகளின் முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்கிறார் என்றும் கூறினார்.
அதைக் கேட்ட நவ் ஷா, “அப்படியென்றால் உங்கள் சொந்தச் செலவுகளை எப்படி நடத்துகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் ஆச்சரியப்படுத்தும் பதில் அளித்தார்.. ஆம்.. அவர் உண்மையில் ஒரு வெற்றி பெற்ற தொழிலதிபர், பல நிறுவனங்களையும் வணிகங்களையும் கொண்டவர்; ஆண்டு வருமானம் 175 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹1,600 கோடி) மதிப்புள்ளவர் என கூறினார்.
தனக்கு 3 மகள்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும். “என் மகள்களுக்கு நான் அளித்த ஆதரவினைப் போலவே, பிற சிறுமிகளும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு உதவுகிறேன்” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் குடும்ப வணிகம் 1929ஆம் ஆண்டில் என் தந்தை வெறும் 5 பவுண்டுடன் தொடங்கியது. இன்று எங்களுக்கு 13 நகைக்கடைகள், 6 உணவகங்கள், ஒரு நாளிதழ் மற்றும் 4 சூப்பர் மார்க்கெட்கள் பிஜியில் உள்ளன,” என்று கூறினார்..
இவ்வளவு செல்வம் இருந்தபோதும், அவர் இன்னும் இரவு நேரங்களில் ஊபர் ஓட்டுவதாகவும், “இது என்னை நிலத்தோடு இணைத்து, மக்களுடன் நெருக்கமாக வைத்திருக்கிறது” என்றும் கூறினார்.
இந்தக் கதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நவ் ஷா, “செல்வம், வணிகம், மரபு அனைத்தையும் கண்ட ஒருவராக இருந்தும், இவர் இன்னும் தாழ்மையாகவும், கருணையுடனும் இருக்கிறார். உண்மையான வெற்றி என்றால் உச்சியை அடைவது அல்ல, பாதையில் பிறரை உயர்த்துவது தான்,” என்று பதிவிட்டுள்ளார்.. .
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் அந்த மூதாட்டியின் மனப்பெருமை, தாழ்மை மற்றும் கருணை குறித்து பாராட்டி வருகிறார்கள். “இவர் உண்மையில் ஒரு அற்புதமான மனிதர்.” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.. அதே போல் பல பயனர்களும் அந்த முதியவரை பாராட்டி வருகின்றனர்..
Read More : Wow! 2.5 மில்லியன் படங்களில் 2 விந்தணுக்களை கண்டுபிடித்த AI..! 19 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோர் ஆன தம்பதி!



