காரை முற்றுகையிட்ட தவெகவினர்.. காரை நிறுத்தாமல் சென்றாமல் விஜய்..! பனையூரில் பரபரப்பு..!

vijay car

அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் விடுபட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் நடைபெற இருந்தது.. எஞ்சியுள்ள மாவட்ட செயலாளர்களை இன்று விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டது..


தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்காமல் புதிய நபர் ஒருவருக்கு பொறுப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த தகவலை அறிந்த அதிருப்தியாளர்கள் தவெக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர். எனினும் அவர்கள் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டனர்.. இதனால் விஜய்யின் வருகை தாமதமானது..

இந்த நிலையில் தற்போது சென்னை பனையூரில் உள்ள சென்னை பனையூரில் உள்ள விஜய் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தார்.. அப்போது விஜய்யின் கார் முற்றுகை.யிட்டதால் பரபரப்பு நிலவியது… தூத்துக்குடியை சேர்ந்த தவெக பெண் நிர்வாகி, அஜிதா ஆக்னல் தரப்பினர் காரை மறித்தனர். எனினும் பெண் நிர்வாகியை கண்டுகொள்ளாமல் அலுவலகத்திற்குள் விஜய் சென்றார்.. காரை மறித்தவர்களை மெதுவாக மோதிக் கொண்டே நிற்காமல் சென்றதால் அங்கிருந்தவர் அலறி அடித்து ஓடினர்.. இன்னும் சற்று நேரத்தில் தவெகவின் விடுபட்ட மாவட்ட செயலாளர்களை விஜய் நியமிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது..

Read More : அதிமுகவிடம் 50 தொகுதிகள் கேட்ட பாஜக..? ஷாக் கொடுத்த இபிஎஸ்..! பரபரக்கும் தமிழக தேர்தல் களம்..!

RUPA

Next Post

கர்ப்பிணி மகளை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற கொடூர தந்தை.. எல்லாம் சாதி வெறி.. திடுக் சம்பவம்..!

Tue Dec 23 , 2025
A cruel father beat his pregnant daughter to death with an iron rod.. It was all caste hatred.. Shocking incident..!
screenshot3881 down 1766475898

You May Like