Swiggy Instamart வெளியிட்டுள்ள “How India Instamarted 2025” என்ற ஆண்டு அறிக்கை, இந்தியர்களின் ஷாப்பிங் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. அவசர தேவைகளுக்கான தீர்வாக தொடங்கப்பட்ட 10 நிமிட டெலிவரி சேவைகள், இன்று அன்றாட வாழ்க்கை, பண்டிகை ஷாப்பிங் மற்றும் மளிகை அல்லாத பொருட்கள் வாங்குவதற்கும் முக்கிய தளமாக மாறியுள்ளன.
2025 ஆம் ஆண்டில், பெங்களூருவில் ரூ.10 மதிப்புள்ள மிகச் சிறிய ஆர்டர் முதல், ஹைதராபாத்தில் ரூ.4.3 லட்சம் மதிப்புள்ள பெரிய வண்டி ஆர்டர் வரை பதிவாகியுள்ளது. ஆண்டின் அதிக செலவாளர் ஒருவர் மட்டும் ரூ.22 லட்சத்துக்கும் மேல் செலவிட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. அந்த ஆர்டர்களில் ஐபோன்கள், தங்க நாணயங்கள், ஏர் பிரையர்கள் போன்ற உயர்மதிப்புப் பொருட்களுடன், பால், முட்டை, ஐஸ்கிரீம், டிக் டாக்ஸ் போன்ற அன்றாட தேவைகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க விஷயம் அனைத்தும் வெறும் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
அறிக்கையின் படி, இந்தியாவில் வினாடிக்கு 4 பாக்கெட்டுகளுக்கு மேல் பால் விற்பனை நடந்துள்ளது. சீஸை விட பனீர் விற்பனை அதிகமாக, காலை உணவுக்காக வெண்ணெய் மற்றும் ஸ்ப்ரெட்கள் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. இரவு நேர சிற்றுண்டிகளில், ஸ்மார்ட்போன்களை மிஞ்சியபடி, மசாலா சுவை கொண்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் 10 பெரிய நகரங்களில் 9 நகரங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா முழுவதும் கறிவேப்பிலை, தயிர், முட்டை, பால், வாழைப்பழங்கள் மீண்டும் மீண்டும் ஆர்டர் செய்யப்பட்ட முக்கியப் பொருட்களாக உள்ளன. கொச்சியில் ஒரே நபர் 368 முறை கறிவேப்பிலை ஆர்டர் செய்துள்ளார். மேலும், ஒவ்வொரு 127 ஆர்டர்களில் ஒன்று ஆணுறை என்பதும், செப்டம்பர் மாதம் ஆணுறை வாங்குவதற்கான உச்ச காலமாக இருந்ததையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நகர வாரியாக சில விசித்திரமான பதிவுகளும் வெளியாகியுள்ளன. சென்னையில் ரூ.1,06,398 மதிப்பில் 228 தனித்தனி ஆணுறை ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன; செல்லப்பிராணி பொருட்களுக்கு ரூ.2.41 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் ரூ.68,600 டிப்ஸ்கள் வழங்கப்பட்டு ‘டிப்ஸ் தலைநகரம்’ என்ற பெயர் பெற்றுள்ளது; ரூ.1.7 லட்சம் ஐபோனும் ரூ.178 லைம் சோடாவும் ஒரே வண்டியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது; நூடுல்ஸுக்கு மட்டும் ரூ.4.36 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மும்பையில் ரெட் புல் சுகர் ஃப்ரீக்கு ரூ.16.3 லட்சமும், ஹைதராபாத்தில் ரோஜாக்களுக்கு ரூ.31,240மும் செலவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், 10 நிமிட டெலிவரி செயலிகள் இந்தியர்களின் ஷாப்பிங் முறையையே மறுவடிவமைத்துள்ளது.
Read more: தங்கம் விலை ரூ. 3 லட்சத்தை கடக்குமா? அமெரிக்க பொருளாதார நிபுணரின் அதிர்ச்சி கணிப்பு!



