fbpx

“மாட்டுக்கறி சாப்பிடும் மார்க் ஜூக்கர்பெர்க்..!” சுவையான கறிக்கு மாடுகளுக்கு பீர் குடுங்கனு அட்வைஸ் வேற..!

ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் மார்க் ஜூக்கர்பெர்க். தற்போது இவர் ஃபேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளங்களை ஒருங்கிணைத்து மெட்டா என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த செயலிகள் பொழுது போக்கு அம்சமாக மட்டுமில்லாமல் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் சிறந்த தளமாக விளங்கி வருகிறது.

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க் மாடு வளர்ப்பது தான் தனக்கு மிகவும் பிடித்த ப்ராஜெக்ட் என தெரிவித்திருக்கிறார். உலகின் உயர் ரக மாடுகளை ஹவாய் தீவில் வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் மாடுகளுக்கு பீர் மற்றும் உலர் பழங்களை உணவாகக் கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவற்றை சாப்பிட்டு வளரும் மாடுகளின் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறந்த மாட்டிறைச்சியை உலகிற்கு அறிமுகம் செய்வதற்காக மாடுகளை இவ்வாறு தயார் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி தனக்கு பிடித்த உணவுகளில் ஒன்று என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் தனது மாடுகள் வளர்ப்பிற்கு ஹவாய் தீவுகளில் ஒன்றான காவாய் என்ற தீவில் பாதி நிலத்தை வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிலும் புதுமைகளை அறிமுகப்படுத்தி வெற்றி காணும் மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது மாடுகள் வளர்ப்பு மற்றும் மாட்டிறைச்சி உற்பத்தியில் மும்முறமாக ஈடுபட்டு வருவது அனைவரும் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

Next Post

தனி தீவில் சிறுமிகளுடன் உல்லாச உறவு..!! டிரம்ப் முதல் டாப் நடிகை வரை..!! வெளியான லிஸ்ட்..!!

Wed Jan 10 , 2024
அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த லிஸ்டில் சிக்கியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அது என்ன எப்ஸ்டீன் லிஸ்ட் என்று நினைக்கிறீர்களா..? சரி, அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிஸ்னஸ் மேன். விர்ஜின் தீவில் இவர் சில நிதி நிர்வாகம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர், அந்நாட்டு நீதிமன்றத்தால் […]

You May Like