தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்ம், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் ” ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்னாமலை. வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை.. இந்த மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.. 5 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கிக் கொண்டிருக்கிறோம்.. விடியல் பயணம் மூலம் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம ரூ.1000 வழங்கி வருகிறோஒம். எங்கள் அண்ணன் கொடுக்கும் சீர் என்று பெண்கள் கூறுகின்றனர்..
இந்த 4 திட்டங்கள் மூலம் மாதம் ரூ.4,000 மிச்சமாகிறது.. ஒவ்வொரு நாளும் 19 லட்சம் குழந்தைகளுக்கு சூடான சுவையான சத்தான காலை உணவை வழங்குகிறோம்.. நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கலைஞர் கனவு இல்லம், அன்புக்கரங்கள் திட்டம், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என ஒவ்வொரு திட்டத்தில் பயனடைந்தவர்களின் வெற்றிக் கதைகளை சொன்னால் இந்த ஒரு விழா போதாது.. கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வெல்லும் தமிழ் பெண்கள் என அரசின் திட்டங்களில் பயனடைந்தவர்களை மேடையேற்றி பெருமை அடைகிறோம்..
நான் முதலமைச்சராகி தொடங்கிய திட்டங்களில் எனக்கு மன நிறைவை திட்டம் ஒன்று தான் மாடல் ஸ்கூல்.. ஒவ்வொருவரையும் சென்று சேரும் வகையில் திமுகவின் திராவிட மாடல் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது..
ஆனால் மத்திய அரசு நமக்கு நிதி கொடுப்பதில்லை.. நமக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் இருக்கிறார்.. தமிழ்நாட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராக வேலை துரோகிகள், துரோகிகளுக்கு வேலை செய்யும் அடிமைகள் என அத்தனை தடைகளை மீறி நாம் முன்னேறி இருக்கிறோம்..
இந்த வளர்ச்சி தான் பலரின் கண்களை உறுத்துகிறது.. வயிறு எரிகிறது.. அதனால் தான் தமிழ்நாட்டிற்கு எப்படியாவது அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. அவர்கள் நினைப்பது நடப்பதில்லை.. தமிழ்நாட்டின் தனித்தன்மை குறித்து நமக்கு ஆதரவாக வட மாநிலத்தில் உள்ளவர்கள் வீடியோக்கள் போட ஆரம்பித்துவிட்டனர்.. பாஜக ஆதரவாளர்களே இந்த ஒன்றிய அரசை கழுவி ஊற்றி வருகின்றனர்..
100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு மூடுவிழா நடத்தி உள்ளனர்.. அந்த திட்டத்தில் காந்தியின் பெயரை எடுத்துவிட்டனர்.. கடந்த 10 ஆண்டுகளாக சிதைத்து வந்த இந்த திட்டத்தை இப்போது நிறுத்திவிட்டனர்.. இதை எதிர்த்து நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நாம் தான் போராடிக் கொண்டிருக்கிறோம்..
ஒன்றிய பாஜக அரசுக்கு கூஜா தூக்கும் அதிமுக அடிமைகள் பொய் கூறி வருகின்றனர்.. அவர்களின் எந்த பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை.. அதனால் தான் திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி என்று கூறிவருகிறேன்..இந்த நல்லாட்சி தொடர திருவண்ணாமலை மக்கள் எப்போதும் போல் உதவ வேண்டும்.. “ என்று தெரிவித்தார்..
Read More : தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகள்.. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி.. பெரும் சோகம்..!



