fbpx

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு..!! எப்போது வரை தெரியுமா..? நீதிபதி அதிரடி உத்தரவு..!!

அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15-ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்தாண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி வாயிலாக அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். இதன்மூலம் 15-ஆவது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டுள்ளது.

Chella

Next Post

வீடியோ: இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த கட்டிட தொழிலாளி.! கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்.!

Thu Jan 11 , 2024
கர்நாடக மாநிலத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நம்பரை மீட்ட காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . கர்நாடக மாநிலம் ஹூபள்ளி மாவட்டத்தில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் லாட் சாப் என்ற நபர் வேலை செய்து வந்தார். இவர் தன்னுடைய கட்டுமான […]

You May Like