“அய்யோ.. தமிழ்நாடே வேண்டாம்.. எங்க ஊரிலே சிகிச்சை பார்த்துக்கொள்கிறேன்.. என்னை விட்டுருங்க!” – மருத்துவமனையில் கதறும் வடமாநில தொழிலாளி..

tiruthani

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் நான்கு சிறுவர்கள் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளார்கள். அப்போது அதே ரயிலில் பயணித்த வடமாநில தொழிலாளர் சிராஜ் மீது கத்தி வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளார்கள். இதனால் சிராஜ் சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிராஜை திருத்தனி ரயில் நிலையத்தில் இறக்கி மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற நான்கு பேரும் அவரை பட்டா கத்தி மற்றும் கட்டையால் தாக்கி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.


இந்த வீடியோ வைரலாகி நாட்டையே உலுக்கி உள்ளது. கை,கால் தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சிராஜ் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதல் சிகிச்சை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட அவர் தற்போது சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிராஜ் தமிழ்நாட்டில் இருக்கவே விருப்பம் இன்றி.. நான் என் சொந்த ஊருக்கே சென்று விடுகிறேன்.. அங்கேயே சிகிச்சை பார்த்துக்கொள்கிறேன் என்று மருத்துவர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more: ஒரு ரயிலின் கடைசிப் பெட்டியில் ஏன் ‘X’ குறியீடு உள்ளது? 99% பேருக்கு தெரியாது..!

English Summary

“Please leave.. I don’t want Tamil Nadu.. I’m going to my hometown..!” – A crying northern state worker..

Next Post

நாட்டின் மலிவான ஆட்டோமேட்டிக் 7-சீட்டர் கார் இதுதான்..! சிறந்த மைலேஜ் கொண்டது..!

Tue Dec 30 , 2025
நீங்கள் நகரப் பயணங்களுக்கு மலிவு விலையில், வசதியான 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோமேட்டிக் காரைத் தேடுகிறீர்களானால், ரெனால்ட் டிரைபர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது தற்போது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோமேட்டிக் MPV காராகக் கருதப்படுகிறது. இதன் குறைந்த விலை, நல்ல எரிபொருள் சிக்கனம் மற்றும் எளிதான ஓட்டுதல் ஆகியவை சிறிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக […]
renault tiber automatic car 1

You May Like