fbpx

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை ஆபத்தானவை!… எச்சரிக்கை விடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 10 இடங்கள் அதிக விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழகத்தில் உள்ள 35 விபத்து பகுதிகளை சரிசெய்வதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் சாலை மேம் பாலங்கள் உட்பட சுமார் 900 கோடி ரூபாய் செலவில் விபத்து தடுப்பு மேம்பாட்டு பணிகள் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 10 இடங்கள் அதிக விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த மேம்பாட்டு பணிகள் மூலம் விபத்துக்கள் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் முதல் இரும்புலியூர் வரையிலான புறவழிச் சாலையில் மட்டும் 5 இடங்களில் விபத்துக்களை தடுக்கும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் சென்னை கோயம்பேடு – மதுரவாயல் இடையே 3 இடங்களிலும் திண்டிவனம் நெடுஞ்சாலையில்3 இடங்களில் விபத்து தடுப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற் உள்ளன. இந்த பணிகளின் மூலம் ஆரம்பத்தில் குறுகிய கால திருத்தங்களை மேற்கொள்ளப்படும் என்றும், இதனால் பயணிகள் முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாகனங்களை இயக்கும் வேகத்தைக் குறைத்து மிகவும் கவனமாக ஓட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். பொதுவாக. மேம்படுத்தப்பட்ட விளக்குகள், ராம்ப்லர்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் இருக்கும் என்றும் இன்னும் வசதிகள் தேவைப்படும் பட்சத்தில் விரிவான திட்ட அறிக்கைகளின் அடிப்படையில் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Kokila

Next Post

காங்கிரஸின் உண்மை முகம் மீண்டும் ஒரு முறை அம்பலம்...! பட்டியல் போட்ட பாஜக MLA வானதி ஸ்ரீநிவாசன்...!

Sat Jan 13 , 2024
காங்கிரஸின் உண்மை முகம் மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜனவரி 10ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் […]

You May Like