தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டுக்கான 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தும் கல்வியாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 முதல் 24ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 1, 4, 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளன. குறிப்பாக தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.