தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது. 1930-40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளும் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெளிநாடுகளில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக தனுஷ் ரூபாய் 20 கோடி வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.