எடப்பாடிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் செங்கோட்டையன்..!! அதிமுக கூடாரமே காலியாக போகுது..!! குஷியில் விஜய்..!!

EPS Sengottaiyan Vijay 2025

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளிலிருந்து அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் தவெக-வை நோக்கிப் படையெடுப்பது மற்ற கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக-வின் மூத்த நிர்வாகியாக இருந்து தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியின் ‘ஆபரேஷன் மாற்றுக்கட்சி’ வியூகத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். குறிப்பாக, அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முக்கியப் புள்ளிகளை குறிவைத்து அவர் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் பெரும் பலனை தர தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்தார்.

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் (OPS) தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த ஜே.சி.டி. பிரபாகரன், புகழேந்தி மற்றும் கே.சி. பழனிசாமி ஆகியோருடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலும் முக்கியப் பங்காற்றியவர். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர். விஜய்யுடன் கைகோர்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்கான தேவை இப்போது எழுந்துள்ளது; அந்த மாற்றத்தை முன்னெடுக்கவே நான் விஜய்யுடன் இணைந்து பயணிக்கிறேன் என்றும் மேலும், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பல மூத்த நிர்வாகிகள் விரைவில் தவெக-வில் இணைவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More : தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசுத் தொகை.. முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்?

CHELLA

Next Post

உங்க ஸ்மார்ட்போன் அதிகமா ஹீட் ஆகுதா? இதை தடுக்க இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

Sat Jan 3 , 2026
இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டன. காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை, படிப்பு, அலுவலக வேலை, கேம் விளையாடுவது அல்லது சமூக ஊடகங்களைப் பார்ப்பது என எல்லாவற்றுக்கும் மொபைல் போனைப் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. இருப்பினும், ஸ்மார்ட்போன் பயனர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனை, போன் அதிக வெப்பமடைவதுதான். பலரும் தங்கள் போனை சிறிது நேரம் பயன்படுத்திய உடனேயே அது வெப்பமடைவதாக புகார் […]
mobile phone heating

You May Like