நெருங்கும் பொங்கல்.. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு..!

madurai jallikattu competitions 1

பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.. அதே போல் அடங்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பதை தாண்டி தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது..


தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை.. சமீபத்தில் மதுரைக்கு என பிரத்யேக ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி மதுரை அவனியாபுரத்தில் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலமேட்டில் வரும் 16-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17-ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டை பாதுகாப்பை நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.. அமைச்சர் மூர்த்தி மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.. அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஜல்லிக்கட்டு தேதிகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்..

Read More : திறந்தது வாடிவாசல்..!! புதுக்கோட்டை மண்ணில் புழுதி பறக்க தொடங்கியது 2026-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு..!!

RUPA

Next Post

தலைவர் 173 : கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குனர் இவர் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sat Jan 3 , 2026
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.. இந்தியாவில் எத்தனையோ உச்ச நடிகர்கள் இன்னும் கோலோச்சி வருகின்றனர்.. ஆனால் 75 வயதிலும் ஒரு நடிகர், 25 வயதில் இருக்கும் அதே துள்ளல், ஸ்டைலுடன் வலம் வர முடியும் என்றால் அது நிச்சயம் ரஜினி மட்டுமே.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரஜினி.. எத்தனை வயதானாலும் […]
rajini kamal movie

You May Like