“ திராவிடத்தை முதலில் எதிர்த்தவரே திருமா தான்.. இன்று தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசி வருகிறார்..” சீமான் காட்டம்..!

thiruma seeman

ஒருபுறம் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. மறுபுறம் அரசியல் தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல்களும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் தற்போது திருமாவளவன் – சீமான் இடையே நாளுக்கு நாள் வார்த்தை மோதல் வலுத்து வருகிறது.. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளன், சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என கூறியிருந்தார்.. அதற்கு எங்களுக்கு பிரசவம் பார்த்தவர் திருமாவளவன் தான் என சீமான் பதிலடிகொடுத்தார்..


இந்த நிலையில், திருமா தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசுவதாக சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் “ திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான். 20026-ம் ஆண்டுக்கு முன்னர் திருமாவளவன் பேசிய பேச்சுகளை கேட்டு பாருங்கள்.. திராவிடத்திற்கு எதிராக திருமா பேசிய போது முன் வரிசையில் இருந்து கேட்டவன் நான். ஆனால் இன்று திருமாவளவன் தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசிவருகிறார்..

திராவிடம் எங்கு தமிழை காக்கிறது.. இன்று தமிழ் எங்குள்ளது.. என் மொழி இல்லை,, வரலாறு இல்லை.. கலாச்சாரம் இல்லை.. என் கலை, இலக்கிய இல்லை, பண்பாடு இல்லை.. எனக்கென அரசியல் இல்லை.. ஆனால் திராவிடம் தான் பாதுகாத்தது என்றால் எப்படி சரியாகும்? இன்று எல்லா இடங்களிலும் ஹிந்தி உள்ளது.. ஹிந்தியை எதிர்ப்பது என்பது ஒரு நாடகம்.. எதிர்க்கட்சியாக இருக்கும் போது Go Back Modi, ஆளுங்கட்சியாக இருக்கும் போது Welcome Modi.. இதெல்லாம் ஒரு நாடகம்..” என்று தெரிவித்தார்..

Read More : போதை பொருள் விவகாரத்தில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது.. காவல்துறையினருக்கு முதல்வர் அட்வைஸ்..!

RUPA

Next Post

Breaking : அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு குட்நியூஸ்.. புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார் CM ஸ்டாலின்..!

Sat Jan 3 , 2026
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.. அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. அதன்படி அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் “ […]
Old Pension Scheme copy

You May Like