தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது..
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் பெரும் பூகம்படம் வெடித்தது.. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 25 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் இருந்தது.. இதையடுத்து 29 பேரின் கட்சி பொறுப்புகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்திருந்தார்..
அதுமட்டுமின்றி தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏக்களை மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இபிஎஸ் தரப்பு சபாநாயகரிம் மனு அளித்திருந்தது..
ஒருவேளை தகுதி நீக்கம் செய்தால், அந்த எம்.எல்.ஏக்களால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனினும் மாற்றுக்கட்சிக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்கள் கட்சி தலைவரிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினால் தலைவர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை பாயாது.. இதனால் தகுதி நீக்க நடவடிக்கைக்கு பயந்து பல எம்.எல்.ஏக்கள் இபிஎஸ்-ஐ சந்தித்து மன்னிப்பு கொடுத்து மீண்டும் அவர் அணியில் இணைந்துவிட்டனர்..
இந்த நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சென்று சந்தித்தனர்.. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.. அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் எஸ்.பி. வேலுமணி தரப்பு மீண்டும் இபிஎஸ் தரப்புடன் இணைந்தது. இதனால் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது..
இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் இணைந்ததை அடுது அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.. மேலும் இன்று தலைமை செயலகம் சென்று சபாநாயகரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற குழு தலைவர், கொறடா தொடர்பாக அளித்த மனுக்களை திரும்ப பெற்றனர்.. கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த மனுக்களும் சபாநாயகரிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது..
ஆனால் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் இல்லத்திற்கு செல்லவில்லை.. இபிஎஸ்-ஐ சந்திக்க முடியாது என்றும், மன்னிப்பு கேட்க முடியாது எனவும் சி.வி. சண்முகம் ஏற்கனவே நிர்வாகிகளிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது.. மேலும் அவர் தலைமை செயலகத்திற்கு சென்று சபாநாயகரை சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது..
Read More : திமுக ஆட்சியில் இருந்த அதே நிலை தவெக ஆட்சியில் தொடரக் கூடாது.. அண்ணாமலை வலியுறுத்தல்..!



