fbpx

மகன் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா..? முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்..!!

ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்த ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியை பரப்ப தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக சமீபகாலமாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ”இளைஞரணிச் செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி அவர்களே, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.

இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுக்க வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கம். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.!” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

BREAKIG NEWS | "சின்னவருக்கு" போஸ்டிங் என்னாச்சு.? முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த அசத்தலான விளக்கம்.!

Sat Jan 13 , 2024
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில தினங்களாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனவரி 22 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பேற்பார் என்றும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் உதயநிதி ஸ்டாலின் […]

You May Like