Flash : சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து..! பயணிகளுக்கு பாதிப்பா? பெரும் பரபரப்பு..!

chennai train

சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையம் அருகே உள்ள பணிமனடையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பயணிகள் விரைவு ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை. பெட்டிகளை இணைப்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் அந்த வழித்தடத்தில் வேறு எந்த ரயில்களும் வராது என்பதால் போக்குவரத்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை.. பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது..

எனினும் பணிமனையில் இருந்து புறப்படும் தண்டவாளத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? அல்லது ரயில் பெட்டிகள் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Read More : Breaking : கிராமம் முழுவதும் எரிவாயு கசிவு.. பற்றி எரியும் மரங்கள்.. ஆந்திராவில் பெரும் பரபரப்பு..!

RUPA

Next Post

3 யோகங்கள்.. 6 ராசிகளுக்கு பெரும் ஜாக்பாட்..! இனி தொட்டதெல்லாம் வெற்றி..!

Mon Jan 5 , 2026
இந்த மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில், மிதுன ராசியில் சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகிறது. அதே நேரத்தில், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய யோகமும், செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் சந்திர மங்கள யோகமும் உருவாகிறது. மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த புதாதித்ய, சந்திர மங்கள யோகங்களுக்கும் கஜகேசரி யோகத்திற்கும் சமசப்தக பார்வை ஏற்படுகிறது. இந்த மூன்று […]
zodiac

You May Like