அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்தியாவின் எரிசக்தி மற்றும் வர்த்தக கொள்கைகள் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால், இந்திய பொருட்களுக்கான சுங்க வரிகளை மிக விரைவாக உயர்த்தலாம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேசிய அவர் “ மோடி ஒரு நல்ல மனிதர். நான் சந்தோஷமாக இல்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். என்னை மகிழ்விப்பது முக்கியம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வர்த்தகத்தில் விளைவுகள் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். “அவர்கள் எங்களுடன் வர்த்தகம் செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராக சுங்க வரிகளை மிக விரைவாக உயர்த்தலாம். அது அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்,” என்று கூறினார்..
இந்த நிலையில் ட்ரம்பின் இந்த கருத்து பிரதமர் மோடியை சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மோடி ஓய்வு பெற்று மார்க் தர்ஷன் மண்டலில் வசிக்க வேண்டுமா என்பதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். மோடி, ட்ரம்பை பின்பற்றுவது இந்திய ஜனநாயகத்துக்கும் பாஜகவுக்கும் ஆபத்து..” என்று தெரிவித்துள்ளார்..
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : ஹனிட்ராப் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த நபர் கைது..! பகீர் தகவல்கள்..!



