அடுத்த விக்கெட் ரெடி..!! அதிரடி காட்டும் செங்கோட்டையன்..!! ஆடிப்போன அதிமுக, திமுக..!! செம குஷியில் விஜய்..!!

sengottai TVK 2025

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் பிரதான கட்சிகளை அதிர வைத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த முகமாகவும், அக்கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவராகவும் கருதப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. அவர் கட்சிக்குள் வந்த பிறகு, மற்ற கட்சிகளிலிருந்து நிர்வாகிகளை ஈர்க்கும் பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை குறிவைத்து, செங்கோட்டையன் திரைமறைவில் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் தவெக-வுக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சி வருகின்றன. இவரது அனுபவமும், அரசியல் வியூகங்களும் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய 3 பிரதான கட்சிகளுக்கும் சவாலாக அமைந்துள்ளன. செங்கோட்டையன் நகர்த்தும் ஒவ்வொரு காயும் தவெக-வின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் விதமாகவே உள்ளது.

இதன் விளைவாக, சேலம் முன்னாள் எம்.எல்.ஏ பல்பாக்கி கிருஷ்ணன், அதிமுகவின் முக்கிய முகமான ஜே.சி.டி பிரபாகர் மற்றும் புதுச்சேரி முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன் எனப் பல முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து தவெக-வில் இணைந்து தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது, டெல்டா மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க வைத்திலிங்கம் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகி பெரியசாமி போன்றவர்களும் விரைவில் தவெக-வில் இணையக்கூடும் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் வெறும் ஒரு சினிமா நடிகரின் கட்சியாக இல்லாமல், அனுபவம் வாய்ந்த பழைய அரசியல் தலைவர்களின் வருகையால் ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. அடுத்தடுத்து நிகழப்போகும் இந்த மெகா இணைப்புகள், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்குமே கடும் நெருக்கடியை கொடுக்கும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Read More : FLASH | தமிழ்நாட்டில் உதயமானது புதிய கட்சி..!! யாரும் எதிர்பாரா நேரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட காடுவெட்டி குரு மகள்..!!

CHELLA

Next Post

அப்படிப்போடு..!! பொங்கலுக்கு முந்தைய நாளும் அரசு விடுமுறை..? தமிழ்நாடு அரசின் மெகா திட்டம்..!! சொந்த ஊர் செல்வோர் செம ஹேப்பி..!!

Wed Jan 7 , 2026
தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதற்கான சூழல் கனிந்துள்ளது. வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 17-ஆம் தேதி உழவர் திருநாள் என வரிசையாக 3 நாட்கள் அரசு விடுமுறை பட்டியலில் உள்ளன. இந்த விடுமுறை நாட்கள் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், அதற்கு […]
bus 2025 5

You May Like