Breaking : ஒரே நாளில் ரூ.6000 சரிவு..! காலையில் உயர்வு, மாலையில் குறைவு; ஆட்டம் காட்டும் தங்கம், வெள்ளி விலை!

gold silver rate

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது..

அந்த வகையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்பட்டது.. அதே போல் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.2.83 லட்சத்திற்கும் விற்பனையானது.

சென்னையில் இன்று காலை உயர்ந்த தங்கம் மாலையில் சற்று குறைந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,800க்கு விற்பனையாகிறது.. சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று காலை உயர்ந்த வெள்ளி விலை மாலை குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.277க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.6000 குறைந்து ரூ.2.77 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இன்று காலை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை மாலையில் குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Read More : எப்படி அனுமதி வழங்கப்பட்டது? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான சர்ச்சைக்குரிய புத்தகத்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

RUPA

Next Post

Flash : ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா? சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கில் காரசார விவாதம்.. நாளை தீர்ப்பு..!

Wed Jan 7 , 2026
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. தற்போது அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை கேவிஎன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. […]
jananayagan chennai highcourt

You May Like