சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.. இந்த படம் முதலில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது..
ஜனவரி 9-ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.. பராசக்தி படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. எனவே இந்த முறை ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படம் நேரடியாக மோதும் நிலை உருவானது..
ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தை போலவே பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தணிக்கை சான்றிதழுக்காக இந்த படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. எனினும் இந்த படத்திற்கும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்பட்டது.. மேலும் இந்த படத்தை மறு ஆய்வுக்கும் சென்சார் போர்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.. இதனால் பராசக்தி படம் வெளியாகுமா என்பதில் குழப்பம் நீடித்தது..
இந்த நிலையில் பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது.. இந்த படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 42 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. U/A சான்றிதழ் கிடைத்துள்ளதால் இந்த படம் திட்டமிட்டபடி நாளை வெளியாக உள்ளது..
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.. சமீபத்தில் வெளியான பராசக்தி பட ட்ரெயலர் கவனம் பெற்ற நிலையில், படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. இந்த சூழலில் பராசக்தி படம் நாளை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..



