பரபரப்பு..! விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த தவெகவினர்..! அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்..!

vijay tvk accident

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பெரம்பூர், திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. மேலும் புதுச்சேரியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்..


தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விஜய் மட்டும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டவில்லை..

இந்த சூழலில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று பிரச்சாரம் செய்கிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் தூத்துக்குடி சென்றார்.. அங்கிருந்து சாலை மார்க்கமாக தனது பிரச்சார வாகனத்தில் பாளையங்கோட்டை சென்றார்..

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து பாளையங்கோட்டை நோக்கி சென்ற விஜய் வாகனத்தை அவரின் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர்.. விஜய் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தவர்கள் அடுத்தடுத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் அடுத்தடுத்து விழுந்ததில் பலருக்கு காயம் ஏற்பட்டது.. எனினும் ஆபத்தை உணராமல் விஜய் வாகனத்தை பலர் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர்..

Subscribe to my YouTube Channel

Read More : “ஜாக்கிரதையா இருக்கணும்..” நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்களுக்கு ரஜினி அட்வைஸ்..!

RUPA

Next Post

“திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து போய் உள்ளது.. அதான் நம் மீது காண்டு..” விஜய் பேச்சு..!

Wed Apr 8 , 2026
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் இன்று நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள கே டி சி நகரில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.. […]
tvk vijay nellai campaign

You May Like