இன்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது..
இதுகுறித்து தவெகவினரோ அல்லது விஜய்யோ பாஜகவை எதிர்த்தோ அல்லது கண்டித்தோ எந்த அறிக்கையும் வெளியிட வில்லை.. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் மத்திய அரசை சாடி வருகிறது.. மத்திய அரசு, சென்சார் போர்டு மூலம் ஜனநாயகன் படத்தை முடக்கி உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி குற்றம்சாட்டி உள்ளது.
சென்சார் போர்டு எவ்வளவோ படத்தை நிறுத்தி உள்ளனர்.. தக் லைஃப் படத்திற்கும் பிரச்சனை வந்தது.. விஜய் படத்திற்கே பிரச்சனை வந்த போது ஜெயலலிதாவிடம் கைகட்டி தானே நின்றார்.. இது அரசியல் ரீதியாக நடப்பதில்லை.. எல்லாமே அரசியல் ரீதியாக தான் நடக்கிறது என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்..
இந்த நிலையில் நடிகரும் பாஜக தலைவருமான சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ சென்சார் போர்டு ஒரு படத்தில் கட் கொடுத்தால் அதில் பிரச்சனை உள்ளது என்று தான் அர்த்தம்.. அந்த படம் ரிலீஸாக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும்.. அது எனக்கும் உள்ளது.. ஆனால் அது சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.. ஒரு படம் வெளியாகவில்லை என்றால் அரசு தான் காரணம் என்று கூறுவது ஏற்புடையது..
எதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், எதை அரசியலாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை.. மக்களின் பிரச்சனைகள் பற்றி பேச வேண்டும்.. இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு.. ஆனால் ஜனநாயகன் படம் பற்றி பேசுவது தான் ஊடகங்களுக்கு முக்கியமாக உள்ளது.. இந்த விஷயத்தில் அரசியல் செய்தால் காங்கிரஸ் அனுகூலம் கிடைக்கலாம்..
எனவே ஒரு படம் எதை சொல்கிறது என்பதை சென்சார் சரியாக பார்க்கின்றனர்.. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அவர்கள் கவனிக்கின்றனர்.. செல்வமணி எடுத்த படம் இன்னும் சென்சாரிடம் தான் இருக்கு.. அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை..
ஜனநாயகன் படத்தில் என்ன இருக்கிறது எனக்கு தெரியாது.. ஆனால் இதை வைத்து அரசியல் செய்வது திரைத்துறையில் இருந்து வந்த எனக்கு வேதனையாக உள்ளது. ட்யூட் படம் கூட ஆணவக் கொலைக்கு எதிரான படம் தான்.. எனது அடங்காதே படம் கூட சென்சார் போர்டில் கிடப்பில் தான் உள்ளது.. ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை.. பராசக்தி படமும் மறு ஆய்வுக்கு சென்ற பின்னரே யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.. எனவே சென்சார் போர்டு சரியாக தான் செயல்படுகிறது..” என்று தெரிவித்தார்..
Read More : பராசக்தி படத்தில் 25 இடங்களில் சென்சார் கட்..! இந்தி திணிப்பு, பேரறிஞர் அண்ணா தொடர்பான வசனங்கள் நீக்கம்..!



