இன்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில் தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது “ ஜனநாயகன் படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகளும், ராணுவம் தொடர்பான காட்சிகளும் உள்ளது.. பதில் மனு தாக்கல் செய்ய தனி நீதிபதி அனுமதிக்கவில்லை.. மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரவில்லை.. ஆனால் அந்த உத்தரவை தனிநீதிபதி ரத்து செய்தார்..” என்று தணிக்கை வாரியம் தெரிவித்தது…
அப்போது குறுக்கிட்ட நீதிபதி இன்றே மேல்முறையீடு செய்ய வேண்டும் என அவசரம் ஏன்? நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. நீதிமன்றத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்? இரண்டு நாட்களில் முடிவெடுக்கும் அளவுக்கு என்ன அவசரம்? பதில் மனு கூட தாக்கல் செய்ய அனுமதிக்காத வகையில் என்ன அவசரம்? என கேள்வி எழுப்பினர்..
அதற்கு படத்தயாரிப்பு நிறுவனம் “ 9-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.” என்று தெரிவித்தது. அப்போது, சான்றிதழ் இல்லாமல் படத்தை எப்படி வெளியிடுவீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. மேலும் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவீர்களா எனவும் கேள்வி எழுப்பினர்..
10 அல்லது 12 மணி நேரத்தில் உத்தரவு வேண்டுமென கேட்பது என்ன நியாயம்? சான்றிதழுக்காக சில காலம் காத்திருக்க முடியாதா? படத்தை ரிலீஸ் செய்வதற்கான தேதியை அறிவித்துவிட்டு எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.. மேலும் இது குறித்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பினர்.. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.. இதனால் ஜனவரி 21 வரை ஜனநாயகன் படம் வெளியாகாது..
Read More : பராசக்தி படத்தில் 25 இடங்களில் சென்சார் கட்..! இந்தி திணிப்பு, பேரறிஞர் அண்ணா தொடர்பான வசனங்கள் நீக்கம்..!



