“திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது..” CM ஸ்டாலின் பேசிய வீடியோக்களை பதிவிட்டு அண்ணாமலை விமர்சனம்..

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

உங்க கனவை சொல்லுங்க என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் தனது ஆட்சியில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.. அப்போது “ உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, உங்கள் கனவை நிறைவேற்றப் போகிறது.. உங்க கனவை சொல்லுங்க.. அதை நிறைவேற்றி தருகிறோம்.. சொன்னால் சொன்னதை செய்பவம் இந்த ஸ்டாலின்.. மக்களாகிய நீங்கள் என்னுடன் இருப்பதால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.. அதாவது 80% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்..


இந்த நிலையில் தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லை. யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது.

கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம். போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : நடனமாடும் போதும், நடக்கும் போதும் திடீரென மயங்கி விழும் இளைஞர்கள்.. இது ஏன் நடக்கிறது? எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

RUPA

Next Post

செவ்வாய் கிரகப் பெயர்ச்சி: ஒரு வாரத்தில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்! செல்வம் பெருகும்..!

Fri Jan 9 , 2026
ஜோதிடத்தில், ‘கிரகங்களின் தளபதி’ என்று அழைக்கப்படும் செவ்வாய், வீரம், வலிமை கிரகம் ஆகும். செவ்வாயின் ஒவ்வொரு பெயர்ச்சியும் மனித வாழ்க்கையின் நிதி மற்றும் அசையாச் சொத்துக்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் ஏழு நாட்களில் செவ்வாய் தனது ராசியை மாற்றப் போகிறது, இந்த மாற்றத்தின் காரணமாக 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. குறிப்பாக நிலம், வீடு மற்றும் வாகனம் வாங்க கனவு காண்பவர்களுக்கு இந்த நேரம் […]
zodiac

You May Like