திமுக, அதிமுகவுக்கு செக் வைக்கும் புதிய தமிழகம்..!! தவெகவுடன் கூட்டணியா..? கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிவிப்பு..!!

Krishnasamy 2026

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கூட்டணி கணக்குகள் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த தனது பார்வையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.


குறிப்பாக, “அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் தற்போது வலுவிழந்து காணப்படுகின்றன. நான் விஜய்யின் கட்சியை அவர்களுக்கு நிகராகவே பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். மேலும், திமுக அரசு அனைத்து மட்டங்களிலும் தோல்வியடைந்துவிட்டதாக குற்றம் சாட்டிய அவர், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதோடு, கிராமப்புற வளர்ச்சியை அரசு முழுமையாக புறக்கணித்துவிட்டதாக சாடினார்.

“ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” என்ற விஜய்யின் கருத்தை பற்றி பேசிய அவர், இந்தக் கொள்கையில் விஜய் எந்தளவுக்கு உறுதியாக இருப்பார் என்பதையும், அவரை நோக்கி எந்தெந்த கட்சிகள் நகரப்போகின்றன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். இருப்பினும், தவெக தரப்பில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தன்னைத் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்துப் பேசியதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய சூழலில், அதிமுக தரப்பில் இருந்தும் புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், யாரிடமும் கூட்டணி குறித்து இறுதி முடிவை சொல்லவில்லை என தெரிவித்தார். எங்களை யார் வெற்றிபெற வைப்பார்களோ, அவர்களுடன்தான் கூட்டணி என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், வரும் தேர்தல் பணபலம் இல்லாத நேர்மையான தேர்தலாக அமைய வேண்டும் என்றும், தேர்தல் தேதியை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். திராவிட கட்சிகள் பலவீனமடைந்துள்ள சூழலில், புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யின் வருகை தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More : சித்தர்கள் வணங்கும் சிவன் கோயில்..!! 800 ஆண்டுகால வரலாறு..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

CHELLA

Next Post

நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்து..!! துடிதுடித்து உயிரிழந்த 3 இளைஞர்கள்..!! எடப்பாடி அருகே சோகம்..!!

Sat Jan 10 , 2026
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 இளைஞர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி அருகேயுள்ள இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சஞ்சய் பாரதி மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரும், நேற்று இரவு தங்களது மோட்டார் சைக்கிளில் நங்கவள்ளியிலிருந்து எடப்பாடி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பாப்பாத்தி காடு பகுதி அருகே வந்தபோது, […]
Accident 2026

You May Like