இது வரம்பற்ற செயல்.. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது; காங். நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!

Selvaperunthagai

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது..


குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. மேலும் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் இல்லை எனில் திமுக வெற்றி பெற்றிருக்காது என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார்.. இதற்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. இதனால் திமுக – காங்கிரஸ் இடையேயான கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “  திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது, இதை பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

அதிகார பகிர்வு, கூட்டணி குறித்த கருத்துகளை மாநில தலைமியிடமோ, தேசிய தலைமையிடமோ தெரிவிக்கலாம்.. பொதுவெளியில் எத்தனை தொகுதிகள் அல்லது கூட்டணி குறித்து பேசுவது வரம்பை மீறிய செயல்.. அது தவறு.. எங்களுக்கு அகில இந்திய தலைமை வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளனர்.. கூட்டணி குறித்து என்ன பேச வேண்டும் என்று.. அகில இந்திய தலைமையால் அமைக்கப்பட்ட இந்த குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? அல்லது இவர்கள் பொதுவெளியில் பேசுவது கண்டிக்கத்தக்கது.. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தனியாக பேசுவதை ஏற்க முடியாது.. கூட்டணி குறித்து தேசிய தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட குழு பார்த்துக் கொள்ளும்.. பொதுவெளியில் கூட்டணி குறித்து கருத்து சொல்வது இந்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும்.. அதை யாரும் செய்யக் கூடாது..” என்று தெரிவித்தார்..

Read More : Flash : சூடுபிடிக்கும் கரூர் வழக்கு விசாரணை..! விஜய் பிரச்சார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!

RUPA

Next Post

சுதந்திர இந்தியாவில் இதுவே முதன்முறை..! பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்..! முழு விவரம் இதோ..!

Sat Jan 10 , 2026
இந்திய அரசு 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. இந்த முறை, பிப்ரவரி 1 ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி […]
nirmala sitharaman budget

You May Like