இண்டர்நெட் சேவை முடக்கம்.. 13 நாட்களாக பற்றி எரியும் ஈரான்..! டிரம்ப் விடுத்த எச்சரிக்கை..!

iran protest

வெள்ளிக்கிழமை, ஈரானில் மக்கள் மீண்டும் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டங்களை அடக்க அரசாங்கம் நாடு முழுவதும் இணைய சேவையை முடக்கிய நிலையில், இந்த ஒடுக்குமுறையால் ஏற்கனவே பல டஜன் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆரம்பத்தில், வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்தது என்பதற்கான கோபமே இந்த இயக்கத்தின் காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அந்தக் கோபம், 1979-ஆம் ஆண்டு மேற்கத்திய ஆதரவுடன் இருந்த ஷாவை அகற்றி அதிகாரத்துக்கு வந்த பிறகு ஈரானை ஆளும் மதகுரு ஆட்சியே (clerical system) முடிவுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையாக மாறியுள்ளது.

தலைநகர் டெஹ்ரானின் சாததாபாத் பகுதியில், மக்கள் வீடுகளில் இருந்து பாத்திரங்களை அடித்து ஒலி எழுப்பி, “காமெனிக்கு மரணம்” போன்ற அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அந்த வீடியோக்களில், போராட்டத்திற்கு ஆதரவாக கார்கள் ஹார்ன் அடித்தும் சென்றது..

இதுபோன்ற போராட்டங்கள் டெஹ்ரானின் பிற பகுதிகளிலும் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் காணொளிகள் வெளிவந்துள்ளன. மேலும், ஈரானுக்கு வெளியே செயல்படும் பாரசீக மொழி டிவி சேனல்கள் வெளியிட்ட வீடியோக்களில்,
மஷ்ஹத் (கிழக்கு ஈரான்), தப்ரிஸ் (வடக்கு ஈரான்) மற்றும் புனித நகரமான கோம் ஆகிய இடங்களிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் புதிய போராட்டங்களில் ஈடுபட்டதை காட்டுகின்றன.

இந்த புதிய போராட்டங்களுக்கு முன்னதாக, வியாழக்கிழமை நடந்த பேரணி, 2022–2023 காலகட்டத்தில் பெண்கள் உடை விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மக்சா அமினி காவல் மரணத்திற்கு பிறகு வெடித்த போராட்டங்களுக்குப் பிறகு, ஈரானில் நடந்த மிகப்பெரிய மக்கள் போராட்டம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இணைய கண்காணிப்பு அமைப்பான நெட் பிளாக்ஸ் (NetBlocks), கடந்த 24 மணி நேரமாக ஈரான் அரசு நாடு முழுவதும் முழுமையான இணைய முடக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஈரான் மக்களின் உரிமைகளை மீறுவதாகவும், அரசின் வன்முறைகளை வெளியே தெரியாமல் மறைப்பதற்கான முயற்சியாகவும் உள்ளது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, ஈரான் அரசு செய்திருக்கும் இந்த “முழுமையான இணைய முடக்கம்” என்பது, போராட்டங்களை அடக்குவதற்காக அவர்கள் செய்து வரும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்களை வெளியில் தெரியாமல் மறைக்கவே என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளது.

நார்வே நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள Iran Human Rights என்ற மனித உரிமை அமைப்பு, 9 குழந்தைகள் உட்பட 51 போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படைகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளனர் என்றும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரான் அரசு நடத்தும் டிவி சேனல்கள், வெள்ளிக்கிழமை சில நகரங்களில் ஆட்சிக்கு ஆதரவாக எதிர்ப்போராட்டங்கள் (counter-protests) நடைபெற்றதாகவும், அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அரசுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதாகவும் காட்டும் காட்சிகளை ஒளிபரப்பின.

தென்-கிழக்கு ஈரானில் வாழும் பலூச் சுன்னி சிறுபான்மை சமூகத்தை கவனிக்கும் Haalvsh மனித உரிமை அமைப்பு, சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் ஜாஹெதான் நகரில், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் பலர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.

மேலும், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 28 முதல் போராட்டங்கள் தொடங்கிய நாளிலிருந்து பாதுகாப்புப் படைகள், பெரும்பாலும் அமைதியாக நடந்த போராட்டங்களை கலைக்கவும், மக்களை அச்சுறுத்தவும், தண்டிக்கவும்
துப்பாக்கிகள், இரும்புத் துகள்கள் நிரப்பிய ஷாட்கன்கள், நீர்ப்பீரங்கி, கண்ணீர் புகை குண்டுகள், அடித்துத் துன்புறுத்தல் போன்ற முறைகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றன என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.

ஜனவரி 3க்குப் பிறகு நடைபெற்று வரும் பெரும் போராட்டங்களைப் பற்றி முதன்முறையாக கருத்து தெரிவித்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி, வெள்ளிக்கிழமை போராட்டக்காரர்களை “சீரழிப்பவர்கள்” என்றும் “நாசகாரர்கள்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.

அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தனது உரையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைகளில் “ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்களின் இரத்தம் ஒட்டியுள்ளது” என்று கூறினார். இது, ஜூன் மாதத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய போரிலும், அதற்கு அமெரிக்கா ஆதரவு மற்றும் நேரடி தாக்குதல்களும் வழங்கியதையும் குறிக்கும் வகையில் அவர் பேசியதாக கருதப்படுகிறது.

மேலும், திமிர் பிடித்த அமெரிக்க தலைவர் ஒருநாள் 1979 புரட்சிக்கு முன் ஈரானை ஆண்ட அரச வம்சம் போலவே வீழ்த்தப்படுவார் என்று எச்சரித்தார்.. மேலும் “இஸ்லாமிய குடியரசு நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மரியாதைக்குரிய மக்களின் இரத்தத்தின் மூலம் உருவானது. நாசகாரர்களுக்கு முன் நாம் ஒருபோதும் பின்னடையமாட்டோம்,” என்று அவர் கூறினார்.

டிரம்பின் எச்சரிக்கை

அதே நாளில், டிரம்ப், ஈரான் தலைவர்கள் “பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர்” என்று கூறி, இராணுவ தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடும் என்ற தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். “சில வாரங்களுக்கு முன் யாரும் சாத்தியமென்று நினைக்காத நகரங்களை இப்போது மக்கள் கைப்பற்றுவது போல் தெரிகிறது,” என்று அவர் தெரிவித்தார். மேலும் “நீங்கள் துப்பாக்கிச் சூடு தொடங்கினால், நாங்களும் துப்பாக்கிச் சூடு தொடங்குவோம்,” என்று கடுமையாக எச்சரித்தார். ஈரான் போராட்டங்களைச் சுற்றி கமேனி, டிரம்ப் மற்றும் அமெரிக்க அரசின் இடையே கடும் வார்த்தை போர் தொடங்கி உள்ளது.

Read More : “அமெரிக்கா ஏதாவது செய்யணும்.. இல்லன்னா ரஷ்யா, சீனா சும்மா விடமாட்டாங்க..” கிரீன்லாந்து குறித்து டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை..!

RUPA

Next Post

மிக கனமழை பொளந்து கட்டும்.. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..! சென்னையில் நாளை கனமழை..

Sat Jan 10 , 2026
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னையில் நாளை கனமழை பெய்யும் என்றும் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ வேகத்தில் […]
tn rains new

You May Like