அதிமுகவில் அடுத்த பூகம்பம்..!எஸ்.பி.வேலுமணி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. செய்தியாளர்களிடம் ஆவேசமான சி.வி. சண்முகம்..!

eps shanmugam

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது..


அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் பெரும் பூகம்படம் வெடித்தது.. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 25 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் இருந்தது..

அதுமட்டுமின்றி தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏக்களை மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இபிஎஸ் தரப்பு சபாநாயகரிம் மனு அளித்திருந்தது..

இருதரப்பு மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இன்று மீண்டும் ஒன்றிணைந்துவிட்டனர்.. மேலும் சபாநாயகரிடம் பரஸ்பரம் கொடுத்த மனுவையும் திரும்பப் பெற்றனர்..

சி.வி. சண்முகத்தை தவிர மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் இபிஎஸ் பக்கம் சென்றுவிட்டனர்.. ஆனால் இபிஎஸ்-ஐ சந்திக்க முடியாது என்றும், மன்னிப்பு கேட்க முடியாது எனவும் சி.வி. சண்முகம் ஏற்கனவே நிர்வாகிகளிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது

இதையடுத்து சி.சண்முகத்துடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. 10-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சி.வி சண்முகத்துடன் நடத்திய இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் மீண்டும் தான் தொடரப்போவதில்லை என சி.வி. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்..

இபிஎஸ் தலைமை என்றாலும் தனியாக உள்ளிருந்து செயல்படலாம் என்ற எஸ்.பி. வேலுமணி கருத்துக்கு சி.வி சண்முகம் உடன்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. எனவே சி.வி சண்முகத்துடன் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

இதையடுத்து தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சி.வி. சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பயங்கரமாக ஆவேசப்பட்டார்.. அப்போது செய்தியாளர்களை கோபத்துடன் கண்டித்த சி.வி. சண்முகம், நோ கமெண்ட்ஸ் என கூறிவிட்டு சென்றார்.. தணி அணியாக பிரிந்து சென்ற அனைவரும் இபிஎஸ் பக்கம் சென்றுவிட்டதால் சி.வி. சண்முகம் ஆவேசத்தில் உள்ளதாக கூறப்படுகிறது..

Read More : பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய்..! தமிழக நலன் சார்ந்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன..?

RUPA

Next Post

PF கணக்கு வைத்துள்ள ஊழியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! இந்த சிறிய வேலையை செய்யவில்லை எனில் பெரும் சிக்கல்..!

Wed May 27 , 2026
If a account holder passes away without making any nomination, it becomes extremely difficult for their heirs to withdraw the PF funds.
PF Epfo Money

You May Like