தமிழ்நாட்டில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்து வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளக் கரும்புடன், தமிழக அரசின் இலவச வேட்டி-சேலைகளும் வழங்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்ப அட்டைதாரர்களின் பொருளாதார தேவையை நிறைவு செய்ய 3,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சுமார் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்தப் பலன்கள் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஜனவரி 13-ஆம் தேதிக்குள் விநியோகப் பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டிருந்தாலும், வெளியூர்களில் வேலை நிமித்தமாகத் தங்கியிருப்பவர்களின் நலன் கருதி ஜனவரி 14-ஆம் தேதியன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், தை பொங்கல் அன்றே (ஜனவரி 15) சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்கள் பலரது நிலை கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் தங்களது உரிமையான பொங்கல் பரிசைப் பெறுவதில் சிக்கல் நீடிப்பதால், விநியோக காலத்தை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்து வருகிறது. இன்னும் டோக்கன் பெறாதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளை அணுகி அவற்றைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Read More : பேச்சுவார்த்தை நிறைவு..!! விஜய் அழைப்பு..!! TVK-வில் இணைகிறார் ஓபிஎஸ்..!! தவெக நிர்வாகி பரபரப்பு பேட்டி..!!



