Ration Card | ரேஷன் கடையில் இனி இதுவும் கிடைக்கும்.. பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்..!

Ration 2025

தமிழகத்தில் பொதுமக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் நோக்கில், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தேவையான கேழ்வரகை தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் பணிகளை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம், விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


கடந்த 2024–25 ஆம் ஆண்டு கொள்முதல் சீசனில் மொத்தம் 3,950 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கிய நடப்பு சீசன், முதலில் ஜனவரி மாதம் வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இந்தக் கொள்முதல் காலத்தை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்துள்ளது.

இதனால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கூடுதல் கால அவகாசத்தில் அரசு கொள்முதல் நிலையங்களில் வழங்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், ஒரு டன் கேழ்வரகுக்கு ரூ.48,860 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் மொத்தம் 6,000 டன் கேழ்வரகைக் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே 2,005 விவசாயிகளிடமிருந்து 4,282 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள இலக்கை எட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான சிறுதானியங்கள் கிடைப்பதோடு, விவசாயிகளுக்கும் நிலையான சந்தை மற்றும் ஆதரவு விலை கிடைக்கிறது. குறிப்பாக, மத்திய அரசு ராணுவ உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்த முயற்சி, உணவுப் பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.

Read more: இந்தியாவின் இந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை! எந்த மாநிலம்..?

English Summary

Ration Card | This will now also be available at the ration shop.. Very happy news for the public..!

Next Post

நேற்று திருச்செந்தூர்.. இன்று சீரடி.. சாய்பாபாவை மண்டியிட்டு வழிபட்ட விஜய்..!

Wed Apr 29 , 2026
Yesterday in Tiruchendur.. today in Shirdi.. Vijay knelt down and worshipped Sai Baba..!
seeradi vijay

You May Like