விஜய் ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்..! தெறி ரீ ரிலீஸ் ஒத்திவைப்பு..! என்ன காரணம்?

jananayagan theri 1

விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. எனினும் சென்சார் சான்று வழங்கப்படாததால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. விஜய்யின் அரசியல் வருகையால் ஜனநாயகன் படம் தான் அவரிடம் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே ஜனநாயகன் படம் வெளியாகாததால் அவரின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்த சூழலில் வரும் 15-ம் தேதி விஜய்யின் தெறி ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் தெறி.. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது..

இந்த நிலையில் விஜய் நடித்த தெறி படத்தின் ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பொங்கலுக்கு புதிய திரைப்படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. தயாரிப்பாளர் கலைப்புலி தானு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனநாயகன் படம் வெளியாகாததால் கவலையில் இருந்த விஜய் ரசிகர்கள் தெறி படம் ரீ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.. ஆனால் தற்போது தெறி படத்தின் ரீ ரிலிஸும் ஒத்திவைக்கப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : Flash : ஜனநாயகன் சென்சார் வழக்கு.. வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை..! படக்குழுவுக்கு நிவாரணம் கிடைக்குமா?

RUPA

Next Post

பொங்கலுக்கு பிறகு இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறும்… உங்கள் ராசி இதில் இருக்கிறதா?

Tue Jan 13 , 2026
வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இயக்கம் நமது வாழ்க்கையை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் தனது ராசியை மாற்றினாலும், மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக சஞ்சரிக்கும்போது, ​​அது ஒரு சிறப்பு யோகமாக கருதப்படுகிறது. இத்தகைய கிரகச் சேர்க்கை ‘திரிகிரக யோகம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகம் உருவாகும்போது, ​​சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜனவரி 17 […]
horoscope 1

You May Like