இன்ஸ்டா கள்ளக்காதலனுடன் ரூம் போட்டு உல்லாசமாக இருந்த பெண்..!! நிர்வாணமாக கிடந்த உடல்..!! ஏற்காட்டில் பரபரப்பு..!!

Crime 2026 3

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சாலா (33) எனும் இரு குழந்தைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவருக்கும் சாலாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்குள் பண விவகாரம் தொடர்பாக கடும் வாக்குவாதம் வெடித்ததாக கூறப்படுகிறது. தான் கேட்ட பணத்தை தராமல் பார்த்திபன் ஏமாற்றுவதாக சாலா குற்றம் சாட்டியதால், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பார்த்திபன், சாலாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின்னர், எவ்வித சலனமும் இன்றி அறையைப் பூட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி தனது சொந்த ஊரான இளம்பிள்ளையில் பதுங்கிக் கொண்டுள்ளார். விடுதி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த ஏற்காடு போலீசார், விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் பார்த்திபன் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த பார்த்திபனை சில மணி நேரங்களிலேயே சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான பார்த்திபனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : FLASH | அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து விலகும் தமிழ் மாநில காங்கிரஸ்..? செம ஷாக்கில் எடப்பாடி பழனிசாமி..!!

CHELLA

Next Post

Breaking : ஷாக்..! ஒரே நாளில் ரூ.15,000 உயர்வு.. புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை..

Wed Jan 14 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த […]
gold price prediction

You May Like