பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது..
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. இந்த போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.. சிறந்த காளையின் உரிமையாளருக்கு ட்ராக்டரும் பரிசாக வழங்கப்படுகிறது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 2-ம் பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது..
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர்களுடன் அமர்ந்து ரசித்து பார்வையிட்டார்.. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கண்ணப்பன், எம்.பிக்கள், சு.வெங்கடேசன், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்..
இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டினை காண வந்த முதல்வர் மு.க ஸ்டாலின் 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது பேசிய அவர் “ வீரம் நிறைந்த இந்த மதுரை மண்ணில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்கும் போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறந்த மாடுபிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் வேலை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அலங்காநல்லூரில் ரூ.2 கோடி மதிப்பிட்டில் ஜல்லிக்கட்டு மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்..
Read More : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..! சீறிப் பாயந்த அண்ணாமலை காளை வெற்றி..! சிதறி ஓடிய வீரர்கள்..!



