கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
அன்றைய தினம் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி இருந்தது.. அவரது பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், குரல் பதிவாகவும் பதிவு செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய், விசாரணைக்கு விலக்கு கோரிய நிலையில் அதனை சிபிஐ ஏற்றுக்கொண்டது.. அதன்படி விஜய் இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.. அதன்படி இன்று 2-வது முறையாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் பிப்ரவரி முதல் 2-வது வாரத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஒருவேளை விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டால் அது விஜய்க்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.. ஏனெனில், அவர் குற்றம் செய்திருக்கலாம் என்று விசாரணை அமைப்புக்கு போதுமான ஆதாரம் கிடைத்துள்ளது என்று அர்த்தம்.. அந்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.. குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படும் பட்சத்தில் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படலாம் தேவைப்படும் பட்சத்தில் கைது செய்யக்கூட வாய்ப்புள்ளது.
அதே நேரம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே அவர் குற்றவாளி என்று அர்த்தம் இல்லை.. அவர் மீது வழக்கு நடத்த போதுமான ஆதாரம் உள்ளது” என்ற நிலை ஏற்படும்.
அடுத்து என்ன நடக்கும்?
குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டால், அந்த நபருக்கு சம்மன் / கைது வாரண்ட் வரலாம். பின்னர் விசாரணை தொடங்கும். சாட்சிகள், ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு சம்மந்தப்பட்ட நபர் அவர் குற்றவாளியா இல்லையா என்பதை இறுதியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்..
குற்றப்பத்திரிகையில் பெயர் வந்தாலே அவர் குற்றவாளியா?
இல்லை. குற்றப்பத்திரிகை என்பது விசாரணை அமைப்பின் குற்றச்சாட்டு மட்டுமே.. உண்மையில் குற்றம் செய்தாரா இல்லையா என்பதை நீதிமன்றம் விசாரணை முடிவில் தான் தீர்மானிக்கும்.
Read More : கரூர் பெருந்துயரம்.. 2-வது முறையாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்..!



