தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் இன்று நடைபெற்று வருகிறது.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.. விவசாயிகள் தொடர்பான முக்கிய பிரச்சனையை சட்டமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்..
எனினும் எடப்பாடி பழனிசாமி பேச சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.. எனவே தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் “ இபிஎஸ் எழுப்பிய பிரச்சனை குறித்து நாளை சம்மந்தப்பட்ட அமைச்சர் பதிலளிப்பார்.. நாளை இந்த பிரச்சனையை எழுப்பினால் சரியாக இருக்கும்.. இன்று இப்படி பிரச்சனை செய்து நேரத்தை வீணடிக்கும் செயல்.. நாளை இதுகுறித்து விரிவாக பதிலளிக்கப்படும்..” என்று தெரிவித்தார்..
எனினும் முதல்வரின் பதிலை ஏற்காத அதிமுகவினர், முதல்வரின் பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி கடும் அமளியில் ஈடுபட்டனர்.. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. சட்டப்பேரவை வளாகத்தில் “ மக்கள் பிரச்சனையை எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுத்த ஸ்டாலின் அரசை, சர்வாதிகார அரசை கண்டிக்கிறோம்..” என்று முழக்கம் எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “ இன்றைய ஜீரோ ஹவரில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன்.. சபாநாயகர் அனுமதி வழங்க மறுவிட்டார்.. 5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.. இதுகுறித்து அரசின் கவனம் ஈர்க்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.. ஆனால் அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை.. மின்கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பள உயர்வு காரணமாக கோழிப்பண்ணை உரிமையாளார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. எனவே கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.. பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. இதை பேச இந்த அரசு அனுமதிக்கவில்லை.. எந்தளவுக்கு இந்த அரசு சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது..
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் சிக்கன்குனியாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.. இதுகுறித்து பேச அரசு அனுமதி வழங்கவில்லை.. எதிர்க்கட்சி தலைவர் பேசக்கூடாது என்று ஒரே நோக்கில் பேச அனுமதி மறுக்கின்றனர்..” என்று தெரிவித்தார்..
Read More : “அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி நிச்சயம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்..” பியூஷ் கோயல் – இபிஎஸ் உறுதி..!



