மக்களே வெளியே வராதீங்க…! இன்று திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை…! வானிலை மையம் அலர்ட்…!

cyclone rain 2025

தமிழகத்​தில் இன்று திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கடலூர் உள்​ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்​ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11, 12-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும். நாளை ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், வரும் 9-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும்,10-ம் தேதி சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

maha

Next Post

இன்று வானில் நிகழும் 'ரத்த நிலவு' கிரகணம்!. இந்த ராசிக்காரர்கள் உஷார்!. உங்க ராசிகளின் மீது தாக்கம் எப்படி இருக்கும்?.

Sun Sep 7 , 2025
சந்திர கிரகணம் என்பது ஒவ்வொரு ஆண்டும் பல முறை நிகழும் மிகவும் கவர்ச்சிகரமான வான நிகழ்வுகளில் ஒன்றாகும். வானியல் பார்வையில், சர்வதேச வானியல் ஒன்றியம் நமது சூரிய மண்டலத்தில் எட்டு முக்கிய கிரகங்களை அங்கீகரிக்கிறது – புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும். அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் இயற்கையான துணைக்கோள்களைக் கொண்டுள்ளன, மேலும் பூமியின் துணைக்கோள் சந்திரன் […]
blood moon

You May Like