பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது..
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.. சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர்.. பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்..
3.20 மணியளவில் அவர் மதுராந்தகம் சென்றார்.. அவரை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.. இந்த பொதுக்கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.. பிரதமர் மோடியை பொதுக்கூட்ட மேடையில் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.. விழா மேடையில் மோடி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
விழா மேடையில் இபிஎஸ், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, ஜி.கே வாசன், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் அமர்ந்துள்ளனர். மேலும் அதிமுகவின் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தமிழிசை, தங்கமணி உள்ளிட்டோரும் உள்ளனர்..
இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி “ திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.. ஒரு குடும்பம் வாழ் 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.. எந்த தகுதி உதயநிதிக்கு பதவி.. நம்மை எதிர்ப்பவர்கள் தீயவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டா வெற்றி நிச்சயம்.. திமுகவுக்கு இதுவே இறுதி தேர்தல். வரும் 2026 தேர்தல் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்.. இந்த தேர்தலில் தீயசக்தி திமுகவை நீக்குவோம், எம்.ஜி.ஆர், அம்மா கண்ட கனவை நிறைவேற்றுவோம்.. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்..
வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.. தமிழ்நாட்டில் 210 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்..” என்று தெரிவித்தார்..
Read More : “இது திமுகவுக்கு இறுதி தேர்தல்.. NDA கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்..” இபிஎஸ் உறுதி..!



