பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.. அப்போது அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், அன்புமணி, டிடிடி தினகர்ன ஆகிய கூட்டணி தலைவர்கள் பெயர்களை கூறிய பிரதமர், இளம் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் என்று கூறினார்.. பாரத் மாதா கீ ஜே எனக் கூறி உரையை தொடங்கிய பிரதமர் “ 2026-ல் தமிழ்நாட்டிற்கு இது எனது முதல் பயணம்.. பொங்கலுக்கு பிறகு மக்களின் மனதில் ஆனந்தம் நிறைந்திருக்கிறது..
இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்.. நேதாஜி உடன் சேர்ந்து தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் போராடினர்.. தமிழ்நாட்டு மக்களின் நாடி நரம்புகளில் வீரம், நாட்டுப்பற்று பெருக்கெடுத்து ஓடுகிறது.. இங்கு கூடியுள்ள கூட்டம் நாட்டிற்கும் தமிழ்நாட்டுக்கும், தேசம் அனைத்திற்கும் ஒரு செய்தியை அளிக்கிறது.. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகி இருக்கிறது.. தமிழ்நாடு இப்போது திமுகவின் மோசமான ஆட்சியில் விடுபட துடிக்கிறது..
இந்த மேடை, இந்த காட்சி, என்.டி.ஏ குடும்பத்தில் நமது மூத்த தலைவர்கள், ஒரே ஒரு உறுதிப்பாட்டுடன் இங்கே குழுமி உள்ளனர்.. தமிழ்நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அந்த உறுதிப்பாடு.. தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த பாதுகாப்பான ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும்.. இதை என்னால் தெளிவாக காண முடிகிறது.. திமுக அரசாங்கத்தின் முடிவுரைக்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது.. திமுக அரசை CMC – Corruption, Mafia, Crime ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம் என்று அழைக்கின்றனர்.. தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர்.” என்று கூறினார்..
Read More : “இது திமுகவுக்கு இறுதி தேர்தல்.. NDA கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்..” இபிஎஸ் உறுதி..!



