“அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடி எனக்கு உள்ளது.. ஆனால்..” சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

stalin assembly

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.. அப்போது 5 ஆண்டுகளில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.. மேலும் “ ஆட்சி பொறுப்பேற்று 8,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது.. என்னுடைய இலக்கில் வென்று மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன்..


2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

ஒரு சாதனை செய்தால் அதை மிஞ்சும் அளவுக்கு மற்றொரு சாதனை செய்வதே திராவிட மாடல் ஆட்சி.. ஆளுநர் தான் வகிக்கும் பதவியை அவரே அவமானப்படுத்துகிறார்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை படிக்காத ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும்..

ஆளுநர் உரை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், முடிவுறும் போது நாட்டுப்பண் பாடுவதும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபாகும்.. முதலிலேயே நாட்டுப்பண் பாடவில்லை என்பதை திரும்ப திரும்ப திரும்ப குற்றச்சாட்டாக சொல்லி வருகிறார்.. நாட்டின் மீதும், நாட்டுப் பண் மீதும் அளவற்ற மரியாதை கொண்டவர்கள் நாங்கள்..

யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடமெடுக்கும் அளவுக்கு நாங்களும் இல்லை… எங்களுக்கும் பாடம் அளவுக்கு தேசபக்திக்காக போராடியவர்களும் அவர்களும் இல்லை..

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்க வேண்டிய நான் இன்று ஆளுநருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசக்கூடிய நிலையில் நின்று கொண்டிருக்கிறேன்.. இது பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், மக்கள் திலகம் எம்.ஜிஆரும், அம்மையார் ஜெயலலிதாவும் எதிர்கொள்ளாத நெருக்கடி இது.. அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள் கூட இப்படி இல்லை..

அந்தளவுக்கு சோதனைகளை எதிர்கொண்டு இருக்கிறேன்.. சோதனைகள் எனக்கு புதிதல்லா.. சோதனைகளை வென்று வந்தவன் நான்.. என்னை சீண்டி பார்ப்பவர்கள் மகிழ்ச்சி அடையலாம், அது என்னை எதுவும் செய்ய முடியாது..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் புதிய வீடுகள்..!! சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!!

Sat Jan 24 , 2026
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் “சொந்த வீடு” என்ற கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு ஒரு மாபெரும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எட்ட, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்ட முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த மெகா திட்டத்திற்காக அரசு சுமார் 3,500 கோடி ரூபாய் நிதியை வாரி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் […]
Kalaignar Kavavu illam 2025

You May Like