பெரம்பலூர்: நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம்..! போலீஸ் முன்னிலையில் ரவுடியை கொலை செய்ய முயற்சி..! என்ன நடந்தது?

perambalur rowdy

பெரம்பலூர், திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது..


அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.. இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 3 போலீசார் படு காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசியும் அரிவாள் கொண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பல் வெள்ளைக் காளியை கொலை செய்ய வந்த கும்பல் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது வெள்ளைக்காளியை காப்பாற்றுவதற்காக தாக்குதல் நடத்திய கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

எனினும் போலீசாரின் தோட்டாக்களில் இருந்து தப்பிய 10 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து 2 கார்களில் தப்பி ஓடினர். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் பெரம்பலூர் எஸ்.பி ஆய்வு நடத்தினார்.. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..  ரவுடி வெள்ளைகாளி மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : 1 முதல் 50 வரை எழுதாததால்.. 4 வயது மகளை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூர தந்தை..! பகீர் சமப்வம்..!

RUPA

Next Post

இந்த ராசிக்காரர்களின் எல்லா ஆசைகளும் நிச்சயம் நிறைவேறும்..! ஜாக்பாட் உறுதி..!

Sat Jan 24 , 2026
இந்த மாதம் 25 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை சந்திரன் நட்பு, உச்சம் மற்றும் சொந்த வீடுகளில் சஞ்சரிக்கிறார். இதில் மேஷம் மற்றும் மிதுனம் நட்பு வீடுகளாகும், ரிஷபம் உச்ச வீடாகும். அதன் பிறகு, குருவுடனான சேர்க்கையால் கஜகேசரி யோகம் உண்டாகும். அதன் பிறகு, அது தனது சொந்த ராசியான கடகத்தில் நுழையும். இந்த நாட்களில் சந்திரன் பலமாக இருப்பதால், சில ராசிக்காரர்களின் ஆசைகள் […]
zodiac yogam horoscope

You May Like